பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

181


பெருமை பிருதிவிராஜூக்கும் அவர் மகன் ராஜ்கபூருக்கும் இருக்கிறாப்போல, தென்னாட்டிலே அப்படி ஒரு பரம்பரையை உருவாக்கிய பெருமை எனக்கும், என் மகனுக்கும் இருக்குன்னு நினைச்சி நான் சந்தோஷப்பட்டேன். அடுத்த படத்திலேயே அந்த சந்தோஷத்துக்கு ஆபத்து வந்துடிச்சி.”

“அது என்ன ஆபத்து ?”

“அடுத்த படத்திலே ராமச்சந்திரனோடு நடிக்க எனக்கு சான்ஸ் கொடுத்தவங்க, என் மகனுக்குக் கொடுக்கல்லே. அப்பத்தான் இதுக்கு யாரோ காரணமாயிருக்கணும்கிற ஒரு எண்ணம் என் மனசிலே எழுந்தது. அந்த எண்ணம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் நான் மட்டும் எம்.ஜி.ஆரோடு தொடர்ந்து நடிச்சிக்கிட்டு வந்தேன். அந்தச் சமயத்திலே ராமச்சந்திரனாலே பாதிக்கப்பட்ட சில நடிகர்களும் நடிகைகளும் என்கிட்டே வந்து, ‘அவர் எங்க பொழைப்பை அப்படிக் கெடுத்துட்டார். அவர் செய்யற’ ‘தான தரும சாகசத்தாலே இதெல்லாம் வெளியே தெரியமாட் டேங்குதுன்னு புகார் சொல்ல ஆர்ம்பிச்சாங்க.”

“அவரால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களிடம் வந்து புகார் சொல்வானேன் ?”

“யாரையும் எதுக்கும் தட்டிக் கேட்கிற தைரியம் எனக்குத்தான் இருக்குன்னு அவங்க நம்பியதுதான் அதுக்குக் காரணம்.”

“பிற்கு ?”

“இதையெல்லாம் கேட்கக் கேட்க, ‘அப்படியும் இருக்குமா ?ங்கிற ஒரு கேள்விக் குறி வேறே என் மனசிலே எழுந்து, நாளுக்கு நாள் அது பெரிசா வளர்ந்துக்கிட்டே வந்தது. அதுக்குமேலேதான் எதையும் பொருட்படுத்தாம, ‘தானுண்டு, தனக்குக் கிடைக்கிற எச்சிலை உண்டுன்னு நாய் வாழலாம், மனுஷன் வாழலாமா ? தானும் வாழ்ந்து, மற்றவங்களையும் வாழ வைக்கிறவன் இல்லே மனுஷன்னு நான் யோசிக்க ஆரம்பிச்சேன்.” தன்