பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

விந்தன்


“இது வரையிலே சொல்லிக்கிட்டு வந்ததெல்லாம் என் சிறைச்சாலைச் சிந்தனைகள்தானே? இன்னும் என்ன இருக்கு, சொல்ல? ஒண்ணு வேணும்னா சொல்லலாம். ஜெயில்லே நான் ஒரு படம் பார்த்தேன்; கே.ஆர்.விஜயா எடுத்திருந்தது அது.”

“என்ன படம், ‘சபத'மா ?”

“ஆமாம். அந்தப் படத்தின் கதை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது. அதிலே ஒரு பெரிய மனுஷன் வர்றான். உள்ளே அவன் செய்யாத அக்கிரமமில்லே; வெளியிலே இருக்கிறவங்களுக்கோ அவன் சாக்ரடீசாகவும், காந்தியாகவும், இயேசுவாகவும் காட்சியளிக்கிறான். அந்த வேஷத்தை பகவதி ஏத்து ரொம்ப நல்லா செஞ்சிருந்தார். அந்த மாதிரி நாலு படங்க வந்தா நல்லவன் வாழ்வான், நாடும் வாழுங்கிறது என் கருத்து.”

“பொதுவாக சிறைவாழ்க்கை.”

“நல்லாத்தான் இருந்தது. அன்னியன் இந்த நாட்டை ஆண்டகாலத்திலே வேணுமானா அங்கே கொடுமை கிடுமை நடந்திருக்கலாம்; இப்போ அதெல்லாம் ஒண்ணும் இல்லே. அங்கே இருக்கிற அதிகாரிங்களும் நம்மவங்களாப் போயிட்டாங்க; கைதிங்களும் நம்மவங்களாப் போயிட்டாங்க. அதாலே நல்லவன் யாரு, கெட்டவன் யாருன்னு புரிஞ்சிக்கிட்டு, அதுக்கேற்றபடி நடந்துக்கிறாங்க.”

“உங்களை அங்கே நல்லவன் என்று நினைத்தார்களா, கெட்டவன் என்று நினைத்தார்களா ?”

“நல்லவன்னே நினைச்சாங்க!”

“அங்கே உங்கள் பொழுது போக்கு...”

“டென்னிஸ் ஆடினேன். மற்ற நேரங்களிலே இங்கிலீஷ் படிச்சேன்; அதிலிருந்து தமிழிலே வர்ற சமூகக் கதைகளிலே பாதிக்கு மேலே இங்கிலீஷிலிருந்து திருடறதுன்னு தெரிஞ்சது. பிரெஞ்சு படிச்சேன். அதைச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கிட்டே தமிழிலே திட்றதுக்கு இருக்கிற வார்த்தை