பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

185


களையெல்லாம் சொல்லிக் காட்டி, அந்த மாதிரி பிரெஞ்சிலே ஏதாவது இருந்தா, அதை முதல்லே சொல்லிக் கொடுங்கன்னேன். ‘அப்படி எதுவும் பிரெஞ்சிலே இல்லே'ன்னார். அப்போ அந்தப் பிரெஞ்சே எனக்கு வேணாம்'னு விட்டுட்டேன்.

“பிறமொழி படிப்பது பிறரைத் திட்டுவதற்குத்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, என்ன ?”

“அப்படி நான் நினைக்கல்லே; ‘திட்றதிலேகூடத் தமிழை மிஞ்ச இன்னொரு மொழி இல்லாதப்போ, அதைப் படிப்பானேன்?’னு நினைச்சித்தான் விட்டேன்;”

“சிறைக்குச் செல்லும் குற்றவாளிகளில் யாரும் அதை விட்டு வெளியேறும்போது திருந்தி வெளியேறுவதில்லை என்கிறார்களே, அது உண்மைதானா ?”

“உண்மைதான். எதிரி மேலே வைச்ச வஞ்சத்தை மறக்கத்தான் ஜெயில் உதவுது; திருந்த உதவல்லே.”

“உங்கள் அனுபவமும் அப்படித்தானா?”

“என் அனுபவம் வேறே: மற்றவங்க அனுபவம் வேறே. அது சொன்னாப் புரியாது; நீங்களும் ஒரு தடவை ஜெயிலுக்குப் போய் விட்டு வந்தால்தான் புரியும். ஆனா, கெட்டகாரியம் செய்துட்டுப் போய் வராதீங்க; ஏதாவது நல்ல காரியம் செய்துட்டுப் போயிட்டு வாங்க!”

ராதா சிரிக்கிறார்; “பக்தனுக்கு இந்த உலகமே சிறைச்சாலையாயிருப்பதுபோல என் வீடே எனக்குச் சிறைச்சாலையாயிருக்கிறது. அந்த அனுபவம் போதும் “ என்று நானும் பதிலுக்குச் சிரித்தபடி அவரிடமிருந்து விடை பெறுகிறேன்.

முற்றும்.