பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

1971-ல் ‘தினமணிகதிரி'ல் நடிகவேள். எம்.ஆர். இராதாவைப் பேட்டி கண்டு அமரர். விந்தனால் தொடராக எழுதப்பட்ட இந்நூல், தற்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலின் சிறப்பம்சம் கலையுலக விற்பன்னரும், இலக்கிய விற்பன்னரும் இணைந்து தமிழ் மக்களுக்கு இதை வழங்கியிருப்பது.

இச்சுயசரிதத்தை அமைத்திருக்கும் விதம் வாசகர்களைச் சட்டெனக் கவரும் என நம்புகிறோம். இந்நூலைப் படிப்பவருக்கு நடிகவேள். எம்.ஆர். இராதா, தன் சுயசரிதத்தைத் தானே சொல்லக் கேட்பது போன்ற அனுபவம் ஏற்படும். படித்து முடித்த பின்னரும் அவரது குரல் வெகுநேரம் நம் காதுகளில் ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படும்.

உள்ளது உள்ளபடி, கிட்டத்தட்ட மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ போன்று வெளிவந்திருக்கும் இந்நூலை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.


-பதிப்பகத்தார் -