பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

விந்தன்


"அநேகமாகப் பயணிகளைக் கொண்டு போய் வீட்டில் இறக்கி விட்டுக் கூலி வாங்கும்போதுதான் வண்டிக்காரர்களே தகராறுக்கு வருவார்கள். உங்கள் அதிர்ஷ்டத்தைப் பாருங்கள், வண்டியில் ஏறும்போதே தகராறுக்கு வந்திருக்கிறான்”

“அதைக் கூடப் பெரிசா நெனைக்காம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பா, எனக்குன்னு தனி வண்டி பிடிக்க முடியுமா நான்'ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்கல்லே. பொறுமை என்னை விட்டுப் போயிடிச்சி. அவனைக் கொழந்தையைத் தூக்கறாப்போல அப்படியே தூக்கிக் கீழே விட்டுட்டு, நானே லகானைப் பிடிச்சி ஜாவ்ரே ஜாவ்’னு குதிரையை ஓட்ட ஆரம்பிச்சேன். ‘ஏய், ஏய்'னு கத்திக்இட்டே அவன் என்னைத் தொரத்திக்கிட்டு வந்தான். ‘வாப்பா, வந்து நீயும் வண்டியிலே ஏறிக்க, நானே ஒட்றேன்'னேன். ‘என்னடா, வெளையாடறியா ?ன்னு மொறைச்சிக்கிட்டே அவன் இடுப்பிலே செருகி வைச்சிருந்த பிச்சுவாவை எடுத்து என் வயித்திலே குத்த வந்தான். நான் கையிலிருந்த ‘பாட்டரி லைட்'டாலே அவன் கையிலிருந்த க்த்தியை ஒரு தட்டுத் தட்டிவிட்டேன். அது எங்கேயோ போய் விழுந்தது. இருட்டிலே அது எங்கே விழுந்ததுன்னு அவனுக்கும் தெரியல்லே, எனக்கும் தெரியல்லே. கத்தி கையை விட்டுப் போனதும் ரெண்டு பேரும் தாராசிங், கிங் காங்காகி ரோட்டிலேயே கட்டிப் புரண்டோம்...”

“இரண்டு பேரா ?..உங்களுடன் வந்திருந்த நாலு பேர் என்ன ஆனார்கள்?”

“வண்டிக்காரன் கத்தியை எடுத்தபோதே அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்!”

“ரொம்ப நல்லவர்களாயிருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் சொல்லிக் கொள்ளாமல் போயிருக்கிறார்கள்!”

“அந்தச் சமயத்திலே என்ன நடந்ததுன்னா, பத்துப் பதினஞ்சி முஸ்லிம்கள் ‘மார்றே, மார்றே'ன்னு கையிலே கெடைச்சதை எடுத்துக்கிட்டு அந்த வண்டிக்காரனுக்காக