பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

விந்தன்


நீங்கள் என் முகவாய்க் கட்டையிலேயே ஒரு ‘நாக்கவுட் விட்டு, என்னையே ஒரு ‘நண்டுப் பிடி பிடித்துக் காட்டிவிடக் கூடாதே”

“நான் சும்மா ஒரு ‘ஆக்ஷனுக்காகக் கையைக் காட்டினா, அதுக்குப் போய் நீங்க இப்படிப் பயப்படறீங்களே ?”

“உங்களுக்குத் தெரியாது. இன்ஷ்யூரென்ஸ் கம்பெனிக்காரன் பிரீமியத்தைக் கூட என்னாலே ஒழுங்காக் கட்ட முடியறதில்லே.”

“சண்டைன்னா, யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையும் உங்களைப் போலத்தான் ஒதுங்கிக்கப் பார்ப்பார். நாடகக் கம்பெனிக்காரன் எல்லா இடத்திலும் அப்படி ஒதுங்கினா நாடகம் நடத்த முடியாது... ஜகந்நாதய்யரும் சண்டைக்குப் பயந்தவர்தான்; ஆனா வர சண்டையைச் சமாளிக்க அவர் எப்பவும் இருபது முப்பது அடியாட்களைக் கூடவே வைச்சுக்கிட்டிருப்பார். அந்த வசதி பொன்னுசாமிப் பிள்ளைக்கு இல்லே; அதாலே என்னைப் பிடிச்சித் தன் க்ம்பெனியிலே போட்டுக் கிட்டார்...

“அப்படியானால் சின்னப்பாவைப் பற்றியும் எம்.ஜி.ஆரைப் பற்றியும் இப்போது சொல்ல மாட்டீர்களா ?”

“சொல்றேன், சொல்றேன்.... என்னிக்குப் பொன்னுசாமிப் பிள்ளை என்னைப் பிடிச்சாரோ, அன்னியிலேயிருந்து நான் அவருடைய கம்பெனிக்கு ‘ஆர்கனைச'ரானேன். சக நடிகர்களிலே சிலர் படற கஷ்டத்தைப் பார்க்க முடியாம அவர் கம்பெனி ஆரம்பிச்சிட்டாரே தவிர, அதை நடத்தப் போதுமான பணம் அவர்கிட்டே இல்லே, மனம் தான் இருந்தது...”

“அதை வைத்து நூறு வால் போஸ்டர் கூடப் போட முடியாதே”

“அதுக்காக அவர் யார்கிட்டவாவது அப்பப்ப நூறு இருநூறுன்னு கடன் வாங்கிப் போட்டுக்கிட்டே இருப்பார்: