பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

73


11. வாசு பிறந்தான்!

“வஸ்தாது நாயுடு எனக்காக எங்கெங்கேயோ பெண் பார்த்தார். பார்த்த இடத்திலெல்லாம் ‘கூத்தாடிக்குப் பெண் கொடுக்க முடியாது'ன்னு சொல்லிட்டாங்க.”

“அப்புறம்?”

“பையன் கூத்தாடியில்லே, மெக்கானிக்குன்னு சொல்லிப் பெண் பார்க்க ஆரம்பிச்சாங்க. விழுப்புரத்திலே ஒரு பொண்ணு, சரஸ்வதின்னு பேரு. அவ அப்பா ரயில்வேயிலே “டிராப்ட்ஸ் மேனாக இருந்தார். அவரைப் பிடிச்சாங்க. “பையன் மெக்கானிக்கா இருந்தா பார்க்கலாம்’னு அவர் சொல்ல, அவரை ஒரு நாள் வரச் சொல்லி விட்டு என்கிட்டே வந்தாங்க. ‘இதோ பார், பொண்ணைப் பெத்தவர் வரப்போ நீ மூஞ்சியிலே அரிதாரத்தைப் பூசிக்கிட்டு நிற்காதே, கையிலே ஸ்பானரைப் பிடிச்சிக்கிட்டுக் காருக்கு பக்கத்திலே நில்லுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அப்படியே நின்னேன்; கலியாணம் முடிஞ்சிப் போச்சு!”

“நீங்கள் போய்ப் பெண்ணைப் பார்க்கவில்லையா?”

“இல்லை!”

“கலியாணத்தைப் புரோகிதர் நடத்தி வைத்தாரா, பெரியார் நடத்தி வைத்தாரா ?”

“அப்போ நான் பெரியாரின் தொண்டனாகவில்லையே, புரோகிதர் தான் நடத்தி வைத்தார்."