பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

விந்தன்


“அந்தச் சத்தத்தை இப்போது யார் . ரிகார்ட் செய்கிறார்கள் ? அதற்குப் பதிலாகத்தான் குதிரை ஓடுவது போல் கொட்டாங்கச்சியைக் கீழே தட்டி ரீரிகார்டிங்’ செய்து விடுகிறார்களே!”

“இப்போது குதிரைக்குப் பதிலா லாரி என்ன, கழுதைகூட ஓடும். அப்போ குதிரைன்னா குதிரைதான் ஓடும்.”

“எல்லாம் ‘ஹீரோக்க'ளாக நடிப்பவர்களின் தைரியத்தைப் பொறுத்தது, இல்லையா?”

“என்னைப் பொறுத்த வரையிலே நான் என் தைரியத்தை லாரியை ஓட்டிக் காட்டல்லே, குதிரையை ஓட்டியே காட்டினேன். பூந்தமல்லியிலே குருடர் செவிடர் ஊமைப் பள்ளியிருக்கே, அங்கேதான் ஷூட்டிங் நடந்தது. நான் குதிரை மேலே வந்து அந்தப் பள்ளிக்கூடத்து வாசலிலே நிற்கணும். நின்னு. மாடிக்கு ‘ஜம்ப்’ பண்ணனும். பண்ணி, அங்கே இருக்கிற ஹீரோவோடும் அவன் ஆட்களோடும் கத்திச் சண்டை போடணும்...”

“கத்தி நிஜக்கத்தியா, அட்டைக்கத்தியா?”

“நிஜக் கத்திதான். அங்கே சண்டை போட்டுட்டுக் குதிரை மேலே குதிக்கணும். அது வரையிலே ஒரு காட்சி. அந்தக் காட்சி முதல் “டேக்"கிலேயே நல்லா வந்துடிச்சின்னு காமிராமேன் சொன்னார்; சவுண்ட் என்ஜினியர் சொன்னார், டைரக்டர் அவங்க சொன்னதை ஒப்புக்கல்லே, ரீடேக் எடுக்கணும்னு சொன்னார். ‘இருபது முப்பது அடி உயரத்திலேயிருந்து குதிரை மேலே குதிக்கிறது அவ்வளவு லேசில்லே, எடுத்தது போதும்’னு எல்லாரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. ‘நோ நோ, பிலிம் ஒடறப்போ குருடன் ஒருத்தன் குறுக்கே வந்துவிட்டான், ஐ வாண்ட். அநதர் ஒன்னுன்னு அவர் அடம் பிடிச்சார். ‘குருடன் குறுக்கே வந்திருந்தா எனக்குத் தெரிஞ்சிருக்குமே, நானே ‘கட்’ பண்ணிட்டு ‘அநதர் ஒன்'னுன்னு சொல்லியிருப்