பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

97


15. என்.எஸ்.கே. எதிரியானார்

“சில நாடகங்களும் சினிமாப் படங்களும் இந்தக் காலத்திலேதானா வெள்ளி விழாவும் பொன் விழாவும் கொண்டாடுது? அந்தக் காலத்திலேயும் கொண்டாடிக்கிட்டுத்தான் இருந்தது. சேலம் ஓரியண்டல் தியேட்டர்ஸிலே ‘இழந்த காதல்’ நாடகம் ‘நூறாவது நாள் விழா’ கொண்டாடி, அதுக்கு மேலேயும் நடந்துக்கிட்டிருந்தது. அந்த நாடகத்தைப் படமாக்க மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், சாரங்கபாணி அண்ணன் எல்லாரும் வந்து பார்த்தாங்க. அவங்களுக்குக் கதை பிடிச்சிருந்தது; அதிலே நடிச்ச மாரியப்பனைத் தவிர மற்றவங்க எல்லாரையும் பிடிச்சிருந்தது....”

“மாரியப்பனை ஏன் பிடிக்கவில்லை ?”

“அவனைப் பிடிக்காமப் போனதுக்கு காரணம் வேறே ஒண்ணுமில்லே, அவன் அவ்வளவு நல்லா நடிச்சதுதான்!”

“இது என்ன வேடிக்கை?”

“இத்தனைக்கும் அவன் போட்டது பொம்பிளை வேஷம்; ஹீரோயின் பத்மாவா அவன் நடிப்பான். அந்த மாதிரி படத்திலே நடிக்க அப்போ நெஜப் பொம்பிளை கிடைக்கல்லே...”

“அந்த மாரியப்பன் இப்போது எங்கே இருக்கிறார்?”

“தெரியல்லே; அவரோட ஹீரோவா நடிச்ச டி.கே.சம்பங்கி இருக்கிற இடந்தான் தெரியுது; அவர் இருக்கிற இடம் தெரியல்லே..."