உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 தாமிரச் சுரங்கத் தொழிலால் ஐந்து லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய செல்வநிலை உயர்ந்திருக்கிறது. இந்த நாட்டிற்கு வெளிநாடு களிலிருந்து ஆண்டுதோறும் 260 கோடி ரூபாய் கிடைக்கிறது. யானை பிளிறுவதும் சிங்கம் முழங்குவதும் எருமை கத்துவதும் தான் இந்தக் காடுகளில் பல தலைமுறை களாக மக்கள் கேட்டு வந்த குரல்கள். இந்தக் குரல்கள் மாறி, தொழிற்சாலைகளின் ஒலிகள் கேட்கத் தாடங்கின; பாம்பாடும் இடங்கள் பந்தாடும் இடங் களாயின. திருப்பதியில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர் கோயிலை நம்பி வாழ்வது போல, ஜாம்பியா மக்களில் பெரும் பகுதியினர் செப்புச் சுரங்கங்களையும், ஏனையோர் புகையிலை பயிரிடுவதாலும் அரசாங்க வேலைகளாலும் வாழுகின்றனர். மேலும், ஜாம்பியாவின் தாமிரச் செல்வத்தால் அந்த அரசின் வரவு செலவுத் திட்டம் பெருஞ்செலவுக் குப் பின்னரும் நிறைந்த கையிருப்புள்ள திட்டமாக இருந்து வருகிறது. பற்றாக்குறை என்ற பேச்சே அங்கே கிடையாது. தாமிரச் செல்வத்தால் இரயில் பாதை போடப் பட்டிருக்கிறது. விமான நிலையங்கள் தோன்றியுள்ளன' புதிய நகரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கிறித்தவ சமயம் பரவி இருக்கிறது. சுரங்கத் தொழிலை யொட்டி குடியேறி ஐரோப்பியர் நாரத்தைப் பழச் செடியையும் புகையிலையையும் தொழில் முறையில் பயிரிடலாயினர். ஜாம்பியாவின் கொடியிலும் அந்த நாட்டு அரசின் சின்னத்திலும் சுரங்கத் தொழில் இடம் பெற்றி ருக்கிறது.