உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நம்பிக்கையில் ஏமாற்றம் அடைந்தார்கள். தக்கவாறு வழிகாட்ட, ஆற்றலும் பொறுப்பும் உடைய தலைவர் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்க நாடுகள் அனுதாபம் தெரிவித்தன. மாநாடுகளை நடத்தின. அதன் பின்னர் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. . பெரு நகரங்களுக்கப்பால் ஆப்பிரிக்கர்க்கு என்று தனி நகர அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. கூட் டாட்சியில் ஆப்பிரிக்கருக்கு இருந்த உரிமைகள் படிப் படியாகக் குறைக்கப்பட்டன. ஐரோப்பியருக்கு வேலை செய்யும் ஆப்பிரிக்கர் மட்டும், ஐரோப்பிய நகரங்களில் வாழ்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர் களுடைய குழந்தைகளைப் படிக்கவைப்ப தற்கோ படித்தபின் அவர்களை வேலையில் சேர்க்கவோ ஆப் பிரிக்கர் வாழும் நகரங்களுக்குத்தான் அவர்களை அனுப்ப வேண்டும். ஐரோப்பிய நகரங்களில் வாழும் ஆப்பிரிக்கர்களுக்கு வாக்குரிமையே கிடையாது. மேற்கத்திய நாகரித்தையும் செல்வாக்கையும் கிறித்தவ சமயத்தையும் நிலைநாட்டுவதற்குத் தோன் றியவர்களாக ரொடீசிய ரொடீசிய வெள்ளைக்காரர் தங்களை நினைக்கிறார்கள். இந்தக் கருத்தை ஏற்காத அனை வரையும் அவர்கள் கம்யூனிஸ்டு என்று நினைக்கிறார்கள். ரொடீசியாவில் நிற உணர்ச்சியின் விளைவாக, இரயில் ஓட்டியவரும், இரயில் இயந்திரத் தொழிற் சாலையில் வேலை பார்த்த தொழிலாளரும், ஓடும் இரயிலில் உணவு படைப்பவர்களும் ஆகிய ஆப்பிரிக் கர்கள் வேலையைவிட்டு நீக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பதிலாக, இந்த வேலைகளில் சிறிதள