உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கல்வியறிவுடைய ஆப்பிரிக்கர் மிகச் சிலரே. அவர்கள் பயிலும் பள்ளிகளின் தரமும் இரண்டாம் தரமாகவே இருக்கும். வெள்ளையர் பயிலும் பள்ளிகள் அளவிலும் அமைப்பிலும் வசதியிலும் அரண்மனைகள் போலிருக்கும். செய்தித்தாள்கள் யாவும் சில வெள்ளைக்கார நிறுவனங்கள் கையில் உள்ளன. அவர்களே, ஒரு புனை பெயரில் ஆப்பிரிக்கர் கருத்துப்போல ஆசிரியர்க்கு ஒரு கடிதம் எழுதி வெளியிட்டு, மறுநாள் அக் கருத்துக்கு ஒரு மறுப்பும் அரசினரின் விளக்கமும் பிரசுரிப்பர். தொழில்களுக்கு அரசினர் சில சலுகைகளும் காப்பு வரிகளும் பாதுகாப்பும் கொடுத்துவருகின்றனர். எனவே, ரொடீசியாவில் செயற்கையாகத்தான் மக்களின் (வெள்ளையரின்) வாழ்க்கை நிலை பெருமை யாக விளங்கி வருகிறது என்று சிலர் சொல்லுகிறார்கள். 1960ல் கூட்டாட்சியில் (வட) ரொடீசியாவில் திறக்கப் பட்ட கரிபா மின்நிலையம், கூட்டாட்சியின் பெரிய சாதனை என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் முத லீட்டுக்கு ஏற்ப அதில் வருவாய் வரவில்லை என்றும், முதலீட்டுக்காக வாங்கிய கடன்களைத் திரும்பக் கொடுக்க இயலவில்லை என்றும் வீணாகப் பெரிய விளம் பரம் பெற்றதுதான் கண்ட பலன் என்றும் ஜாம்பியா வைப்பற்றி ரொடீசியர் குறை கூறுகிறார்கள். ஒருதலைப் பட்சமாக, சுதந்திரம் அறிவித்தபிறகு ரொடீசியாவும் பிரிட்டனும் இரு வேறு உலகங்களாக உள்ளன. பிரிட்டிஷ் அரசினர், தங்களுக்கு என்றும் போல உரிமை இருப்பதாயும் ரொடீசியா சுதந்திர நாடு அன்று என்றும் கூறிவருகின்றனர்.