உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 ஆப்பிரிக்காவின் அரசியல் நோய்களைக் குணப்படுத்த அவர் முயன்றார். 1953 ஆம் ஆண்டு.அப்போதுதான் நியாசாலந்தை (மலாவி) வட ரொடீசியாவுடனும் தென் ரொடீசியா வுடனும் சேர்த்து நடு ஆப்பிரிக்கக் கூட்டாட்சியைப் பிரிட்டிஷ் அரசினர் அமைத்திருந்தனர். நியாசாலந்தில் தேசிய உணர்ச்சி அரும்பு விட்டுக் கொண்டிருந்தது. நியாசாலந்தின் அரசியலில் டாக்டர் பண்டா முனைந்தார். என் குருமாவின் ஆதரவும் அவருக்கு இருந்தது. ஏழையாகத் தன் நாட்டை விட்டு நடந்து சென்ற பண்டா செல்வராகவும் டாக்டராகவும் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகாய விமானத்தில் வந்து! இறங்கினார், பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்காக பண்டா தாயகம் திரும்பினார். அந்நிலையில், நியாசா லந்து மக்கள் அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். நடு ஆப்பிரிக்கக் கூட்டாட்சியை உடைப் பதும் நியாசாலந்தை சுதந்திர நாடாக்குவதும் தன் னுடைய நோக்கம் என்று அவர் அறிவித்தார். உரி கூட்டரசில் வெள்ளையரின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் என்பதையும் ஆப்பிரிக்க மக்களின் மைகள் பறிக்கப்படுகின்றன என்பதையும் பண்டா சுட்டிக்காட்டினார். இடைவிடாது கிளர்ச்சிகள் செய் தார். அரசினர் பண்டாவைச் சிறையில் அடைத்தனர். 1963 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கரின் கலகங்களின் விளைவாக, நடு, ஆப்பிரிக்கக் கூட்டாட்சி கலைக்கப் பெற்றது. 1964 ஆம் ஆண்டில் நியாசாலந்து ஒரு தனி நாடாயிற்று. 73 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்நாடு மலாவி என்ற பெயரில் பிரிட்டிஷ் காமன்வெல்த்தின் உறுப்பு நாடாயிற்று.