உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு ஆப்பிரிக்கர (ஜாம்பியாவும் அண்டை நாடுகளும்) இந்நூலில் வடரொடீசியா, தென் ரொடீசியா, நியாசாலந்து, அங்கோலா மொசாம்பிக்கே, ஆகிய நாடுகளைக் காண்போம். தென் ரொடீசியா என்ற நாடு இப்போது ரொடீசியா என்று தன் பெயரை மாற்றிக் கொண் டிருக்கிறது. வட ரொடீசியா, ஜாம்பியா என்ற புதுப் பெயரைப் புனைந்து கொண்டிருக்கிறது. நியாசாலந்து மலாவி என்ற பெயரில் இப்போது விளங்கி வருகிறது. இம்மூன்று நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தவை. பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் பெரும் முயற்சியால் போர்த்துக்கல் நாடு தன்வயப்பத்திக் கொண்ட பெரிய பகுதிகள் அங்கோலாவும் மொசாம் பிக்கேயும். இவை இவை உலகத்தின் கண்களில் பெரிதும் படுகின்றன, இந்த ஐந்து நாடுகளும் ஆப்பிரிக்காவின் தென் என்ற பகுதியிலும் தென் ஆப்பிரிக்க ஐக்கியம் நாட்டுக்கு வடக்கேயும் உள்ளன. இவற்றை நடு ஆப்பிரிக்கா என்று குறிப்பது வழக்கமாயிருந்து வருகிறது. ஆனால் இவை ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப் பின் நடுப்பகுதியில் இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும்.