38
சக்தி : (அஞ்சி) முல்லை ! மது படைக்காவிட்டால் மாகாளி மனம் நோவாளே பக்திக்குப் பங்கம் வந் திடுமே! எனக்கொரு உதவி செய்வாயா முல்லை ? ஆம்; நீ செய்யத்தான் வேண்டும் ! (வெடுக்கென்று அவள் கையைப் பற்றி) தஞ்சம் நீதான் ! வேண்டிய பணம் கொடுக்கிறேன்! மதுபானம்"வாங்கிக் கொடு வாங்கிக் கொடு !
முல்லை :- ஐயையோ? அது என்னுல் முடியாதுங்க திமிர}
சக்தி : விடமாட்டேன், விடமாட்டேன் உன்னை !
(விடாமல் பிடிக்க, அவள் இழுக்க இரு வரும் போராட பச்சை வருகிருன்..!
பச்சை : ஜெய் ஈஸ்வரன் : ஜெய்காளி !
(கையை விட்டு விட்டு) ஜெய்ஈஸ்வரன் !
பச்சை : சுவாமிகளே ! ஈஸ்வரனும் காளியும் கை கோர்த்திருந்த காட்சி கண் கொள்ளாத காட்சி ! இன் தும் ஒரு தடவை கிடைக்குமா அந்தத் திருக்கோலம்?
சக்தி பக்தா ! எமது வேட்கையைத் தவருகக் கருதிவிட்டாய் ! இப்போது எ ம க் கு வேண்டியது மங்கையல்ல ; மது !
பச்சை : அடிசக்கை அது (முல்லையைக் காட்டி) இங்கேதான் இருக்குதோ ? ... “