பக்கம்:நந்திவர்மன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

வித்யா : கழுத்தறுக்கும் கபாலிகருக்கும் என்மேல் கருணை பிற க் கிறது ! மகாராணியின் மனமிரங்க வில்லையே!

முல்லை : இவ்வளவுக்கும் காரணமே அந்த சமண ராணிதான்னு சொல்ருர் சக்திமுனையர்.

வித்யா : இல்லவேயில்லை! மகாராணி மாசற்ற செம்பொன்! இது மைத்ரேயன் முட்டிவிட்ட பெரு நெருப்பு !

(பச்சை வேகமாக வருகிருன்.)

பச்சை வித்யாவதி வித்யாவதி : சேதி தெரியுமா ஒனக்கு ?

வித்யா : என்ன சேதி ?

பச்சை : குருக்கோட்டையில் பங்கையனைத் தோற் கடிச்ச மகாராஜா, பாண்டியன் படையெடுப்பு தெரிஞ்சு, அப்படியே பெண்ணையாற்றுப் பக்கமாக வந்து, தொள் ளாறுங்கிற எடத்திலே, பாண்டியன் படையை அடிச்சு நொறுக்கி படுசூரணமாக்கிட்டாராம்!

வித்யா . (மகிழ்ந்து) ஆஃகா பகைவரை வென் ருரா நமது பார்த்திபர்? முல்லை ! நமது மாவேந்தரின் வீரம் குன்றின் மேல் நந்தா விளக்கடி !

பச்சை : அந்த வெளக்கு, நாளை மறுநாளு நகரத் துக்கு வரப்போவுது வரவேற்புக்கு பிரமாத ஏற்பாடு கள்ளாம் நடக்குது !

வித்யா : அப்படியா?

பச்சை : வித்யாவதி ! இன்னொரு பிரமாதமான சங்கதி! ஆன இப்ப இங்கே சொல்லமாட்டேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/104&oldid=671862" இலிருந்து மீள்விக்கப்பட்டது