உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

நந்தி: புலவரேறு பெருங்தேவனுர்க்கு மிக்க நன்றி என்னைக்குது கலத்தோடு வரவேற்றுவாழ்த் திய குடிப்பெருமக்களே! நாட்டுக்காவலரே! ஆயத் தாரே! அறங்கூர் அவையத்தோரே! அனேவர்க்கும் நன்றி உடையேன்!

ஆணவத்தால் கப்பம் கட்ட மறுத்ததோடு கப்பம் கட்டுமாறும் ஆணேயிட்டான் சாளுக்கிய பங்கையன்: அடிமைப்பட்டான்! வஞ்சகத்தால் நம் மீது போர் தொடுத்தான் பாண்டியன்; தோல்வி யுற்றான்! இந்த இருபெரும் போர்களின் வெற்றி களுக்கும் காரணமாக இருந்த வீரப்பெருமக்கள் அனைவரையும் நெஞ்சுகந்து பாராட்டுகிறேன்!

முன்னணிப் படையிலே, தன்னுயிரைத் திரண மாக மதித்துப் போரிட்டு மடித்த மாவீரர் பட்டியல் என்னிடம் இருக்கிறது! அந்த வீரர்களின் சொந்த ஊர்களிலே அவர்களுக்கு வீரக்கல் கட்டு விழா வெடுக்க வேண்டும்! அவர்தம் குடும்பத்தார்க்கு இறையிலியாக கிலம் வழங்கப்பட வேண்டும் மற்றுமுள்ள வீரர்களுக்கு தனிச்சிறப்பு செய்து பரிசுகள் வழங்குவேன்! இந்த மாபெரும் வெற்றி யின் நினைவுச்சின்னமாக.கைலாசநாதர்ஆலயத்தில் கிரந்தரமாக திருவிளக்கேற்றிடப் பத்துக் கழஞ்சு பொன் வழங்குகிறேன்.

சீலாதி: மன்னர் பெரும! பல்லவ நாட்டிலே

பஞ்சம் தலைகாட்டியிருக்கிறது! பரிகாரம் தேட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/107&oldid=671865" இலிருந்து மீள்விக்கப்பட்டது