பக்கம்:நந்திவர்மன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 8 சந்திர இவ்வளவுதானே? எடுத்துக்கொள் ளும். அந்தப்பச்சைக்கிளிகைக்காட்டிலும் பல்லவ இராஜ்யம் எனக்குப்பெரிதாயிற்றே!

விக்ர (தட்டிக்கொடுத்து சபாஷ் சபாஷ்: சந்திரவர்மரே! நாம் அடிக்கடி சந்திப்போம்; வித்யா வதியை...

சந்திர: தக்க சமயத்தில் உம்மிடம் ஒப்படைப் பேன்! கவலை வேண்டாம்!

(பச்சையும், முல்லையும் வாக்கு வாதம் புரிந்தவண்ணம் வரு கின்றனர். இவர்கள் பதுங்கு கின்றனர்)

பச்சை: முடியாது: முடியாது!! முடியாது:::

(யாரோ என்றஞ்சி சந்திர வர்மரும் விக்ரமகேசரியும் ம ைற வில் பதுங்குகின் றனர்; முல்லை. ஏம்ப்பா முடியாது? ஏன் முடியாதுன் னேன்?

பச்சை: உச்சாணிக் கொம்பிலே இருக்கிற இச்சிலிப்பழத்தை ஒன்லை, மட்டுமல்ல. என்லை கூடப்பறிக்க முடியாது!

முல்லை: எப்படியும் எனக்குப் பழம்.வேணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/115&oldid=671874" இலிருந்து மீள்விக்கப்பட்டது