0
சங்கா :- (சிலையைப் பார்த்த வண்ணம்) பார்ப்பது மட்டுமா? சிற்பத்தின் வனப்பிலே தோய்ந்து மகிழ்ந்து இரசித்துக் கொண்டிருக்கிறேனே ஆஃகா அழகு! அழகு !
கந்தி : சங்கா தேவி! நூற்றைம்பது ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த எங்கள் மூதாதை மகேந் திர வர்மரைப் பற்றி நீ யறிவாய் ! அவர் அமைத்த அழகு மணிமண்டபங்கள் ; குடைந்தெடுத்த கூடங்கள் ! குகைக் கோயில்கள் ஏராளம் ஏராளம்! அவற்றிலே திகழும் அற்புதமான சிற்பங்களும், ஒவியங்களும் வண்ணப் பொலிவு காட்டி இன்னும் நமது கண்ணையும், கருத்தை தையும் கவருகின்றன! சித்தன்ன வாசல் குகைக் கோயி லின் நடன காவியம் ஒன்றினை சிறந்ததொரு கலைச் சிற்ப மாக்கி எனது பெயரை மறையாது நிலைக்கச் செய்ய விரும்பினேன், சமைத்துத்தர ஒப்பினர் இந்தச் சிற்பி !
சங்கா - (மகிழ்ந்து) தூய்மையான கலைப்பணி ! மேன்மையான இலட்சியம் கண்ணுள! அருமையான படைப்பு இது. உயிர்ப்பண்பு நிறைந்தது நாட்டியத் தின் நளினமான மெய்ப்பாடுகள் உள்ளத்தை நெகிழ வைக்கின்றன : பாவ பூர்வமான இதன் அமைப்பு, ஆட் டத்தைக் கண்கொண்டு பார்ப்பது போலவும், தாளம், மேளம், சதங்கையொளிகளைச் செவிகொண்டு கேட்பது போலவும் பிரம்மையை உண்டாக்குகிறது !
சிற்பி : தேவி லதாவிரிசிக நடனம் புரியும் இந்த லாவண்யசுந்தரியை, சித்தன்னவாசலில் படியெடுத்து வந்த சித்திரத்தைப் பார்த்து அப்படியே ஆக்கினேன் அப்பழுக்கில்லாமல்! அப்பழுக்கில்லாமல்!