உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22

கிற்காமல் ஆண்டவன் பூசைக்குரிய பவித்ரமான மலரை கை தீண்டி எடுத்தாப்! மூக்காலும் முகர்ந்து விட்டாய்: எத்தகைய பாவம்! எத்தகைய சண்டா ளம் மாசுபட்டதே ஆண்டவன் வழிபாடு மாசுபட் டனவே ஆகம விதிகள்!

சங்கா: சுவாமி! நான் மாறுபட்ட சமயத்த வள் என்பதற்காகவா மலரெடுத்து முகர்ந்ததை மாபெருங் குற்றமாக்குகிறீர்கள்?

சக்தி: மலரெடுத்து முகர்ந்தாய்! மாகாள பைரவமூர்த்தியை அவமதித்துவிட்டாய்: தீண்டாத மந்திர புஷ்பத்தைத் தீண்டி மகத்தான மதநெரி யைக் குலேத்துவிட்டாய்! சண்டாளி

சங்கா: அசீனவர்க்கும் பொதுவான அழகுமலர், ஆண்டவன் படைப்புதானே? சைவர் முகர்ந்தாலும் வைணவர் முகர்ந்தாலும், சமணர் முகர்ந்தாலும், பெளத்தர் முகர்ந்தாலும், ஒரேமாதிரியாகத்தானே மணம் தருகிறது: மலரின் மணத்திலே வேற்றுமை இல்லாதபோது, மதவேற்றுமை ஏன் சுவாமி?

சக்கி: ஜெய் காளி ஜெய் ஈஸ்வரன்! குற்றம் புரிந்துவிட்டு குதர்க்கமா பேசுகிருப்?

சங்கா: எது சுவாமி குதர்க்கம்? மலரைப் படைத்த ஆண்டவன் மற்ற சமயத்தாரையும் சமமாக மதிக்கிருன் என்பதாகுதர்க்கம்?

சக்தி: மலரைப் படைத்தது உங்கள் ஆண்ட வன் அல்ல; எங்கள் கபாலிக மூர்த்தி: எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/124&oldid=671884" இலிருந்து மீள்விக்கப்பட்டது