13
இந்த கலைஞர்களின் போக்கே அலாதிதான்! எழுந் திரும் சிற்பியாரே! எழுந்திரும் ! எனக்கு வெட்கமாக இருக்கிறது !
(எழுந்து நடுங்கி நிற்கிருன் சிற்பி.)
சங்கா :- அஞ்சாதீர் சிற்பியாரே! நீர் அப்படி யொன்றும் பெருங் குற்றம் புரிந்திடவில்லை. கலைஞரிட முள்ள கலைக்கருவம்தான் உம்மையும் தலை இறங்க வைத் தது. சித்தன்ன வாசல் குகைக் கோயில் சித்திரத்தைப் படியெடுத்து வைத்திரே; அது எங்கே?
சிற்பி :- இதோ இருக்கிறது தேவி.
(சுருட்டி வைத்திருந்த சித்திரப் படத்தைக் கொண்டு வந்து கொடுக் கிருன். வாங்கிப் பிரித்துப் பார்த்து)
சங்கா - இதோ பாரும் ; இடக்கை யானைக் கை நிலையிலும், வலக்கையின் உள்ளங்கை சதுர நிலையிலும், பெருவிரல் நுனியும், ஆள்காட்டி விரல் நுனியும் கூடி இருக்கின்றது ! கடாட்ச முத்திரையின் இந்த விரற் கூடல், உமது சிற்பத்தில் இல்லை ! இதுதான் நான் செப்பிய குறை.
சிற்பி - (சித்திரத்தை வாங்கிப் பார்த்து) தேவி! தங்கள் மதி நுட்பத்தை, மகத்தான கலையறிவை நான் எப்படிப் புகழ்வேன் ! என்ன சொல்லிப் போற்றுவேன் !
சங்கா - என்னைப் போற்றுவது இருக்கட்டும்: உமது சிற்பக்கலைப் படைப்புகள் மூலம், நாட்டியக் கலையை நன்கு போற்றும், நாட்டியக் கலை மகத்தான