இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
148
பச்சை: வேணும்; விரல்லே இருக்கற மோதி ரத்தைக் குடுங்க. அது போதும்!
விக்ர: சபாஷ்! கத்தி எங்கே?
சந்திர கத்தி; தோ! நான் கொடுக்கிறேன்.
(தன் கத்தியை உருவிப் போடுகிருன் சந்திரவர் மன் பிடித்துக்கொண்ட பச்சை, து னி ைய பிடித்து அடியை நீட்டிப் பிடித்த வண்ணம் ‘ஒ’ வென்று குரலெடுத்துக் கத்துகிருன், விக்ரமன் விழிக்கிருன். சங் தி ர வர்மன் சிரிக்கிருன்)
பச்சை; உம். கத் துங்கோ! எங்கே? உம்!
(மீண்டும் கத்துகிருன்)
விக்ர: டேப்! இதுதான் கத்திச்சண்டையா?
பச்சை: {கிறுத் தி) பின்னே? கத்தாத சண் டையா? கத்தற சண்டைதான் கத்திச்சண்டை! ஏ ம் ம தி ரி கத்தமுடியுமா? சந்திரவர்மர்தான் கத்திப்பார்க்கட்டுமே!