பக்கம்:நந்திவர்மன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பங்கை :- (எழுந்து வணங்கி) வருக, வ ரு க. தங்கள் வரவு நல்வரவாகுக! அமருங்கள்.

மைத் :- மன்ன! மங்களமுண்டாகட்டும் ! உன் அழைப்பு என்னை சந்தோஷப்படுத்தியது!

பங்கை - சுவாமி ! தங்கள் சந்தோஷத்தையும், என் சந்தோஷத்தையும் நிலைப்படுத்துவதற்காக தாங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும்! அது வேறு எவராலும் சையற்கரிய காரியம்!

மைத் - மிகுந்த சந்தோஷம் சொல் மன்னவா? செய்து முடிக்கிறேன்!

பங்கை :- சுவாமி ஒரு காலத்திலே தென்னுட்டில் பொங்கிப் பரவிய எங்கள் சாளுக்கிய புலிகேசியின் புகழ் மங்கும்படியாகவும், வீராதி வீர விக்கிரமாதித்தரின் வேட்கை நிறைவேருதபடியும் செய்து வி ட் ட ன ர் தொண்டை மண்டிலப் பல்லவர்கள்! அதை இன்று நினைத்தாலும் நெஞ்சம் எரிகின்றது. என் முன்னேர் கள் கைப்பற்றிய காஞ்சியின் சிங்காதனத்தில் நான் இல்லையே பல்லவ நந்திவர்மனன்றாே அந்நாட்டை ஆளுகின்றான்! அவனுக்கல்லவோ நாம் கப்பம் கட்ட நேர்ந்து விட்டது!.

மைத் :- புரிகிறது மன்ன! எனக்கு நன்றாகப் புரி கிறது . ஆல்ை....... (யோசித்தல்)

பங்கை :- என்ன யோசனை சுவாமி ?

மைத் : படைபலம் மிக்க சக்கரவர்த்தி நந்தி வர்மன் ! நேரடியாகப் போரிடுவது நம் சக்திக்கு மிஞ்சிய காரியமாயிற்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/18&oldid=671945" இலிருந்து மீள்விக்கப்பட்டது