பக்கம்:நந்திவர்மன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

காட்சி 3.

இடம்: காஞ்சி அரண்மனை.

காலம் : முற்பகல்.

|மன்னன் தந்திவர்மன் வீற்றிருக்க, அமைச்சர் சீலாதித்தர், சேனபதி விக் கிரமகேசரி இருவரும் நிற்கின்றனர். காவலர்கள் இருக்கின்றனர்.}

நந்தி - அமைசசரே ! உமது சுற்றுலா வெற்றிகர மாக முடிந்திருக்கும் என்று கருதுகிறேன். நமது கடற்கரை நகரங்களும், அங்கே நடைபெறும் இறக்கு மதி, ஏற்றுமதி வாணிபங்களும் எ வ் வா று இருக் கின்றன?

சீலாதி - மன்னர் பெரும! மயிலாப்பூர் துறை முகப் பட்டினம் மக்கள் கூட்டத்தைப் பெருக்குகின்றது. மாமல்லபுரம் கலைக்கூடமாக மட்டுமல்ல, வணிகக்கூடமா கவும் மாறுகின்றது ! மயிலையிலும், மல்லையிலும் இருக் கின்ற நமது கப்பற் படையின் பலம் பயிற்சியின் மூலம் வலிவும், பொலிவுமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

கந்தி :- மயிலையில் புதிய மரக்கலங்களும், கப்பல் களும் கட்டுவதற்குத் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்தோமே ; எவ்வாறு நடக்கிறது?

சீலா : வெளிநாட்டுத்தொழில் வல்லுனரும், நம் நாட்டுச் செல்வரும் நன்கு ஒத்துழைப்பதால், மரக்கலத் தொழிற்சாலையில் இரவு பகல் இடையருது வேலைகள் நடக்கின்றன ! சிங்களம், சீனம், சயாம் போன்ற நாடுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/21&oldid=671970" இலிருந்து மீள்விக்கப்பட்டது