பக்கம்:நந்திவர்மன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

குடும்பத்துப் பெண் குடும்பத்துப் பொண்ணுேட லட்சணத்தைப் பாருங்க! அன்னியனேட் சித்திரத்தை ரகசியமாத்திட்டி அ ழ கு பாக்கறவளா குடும்பத்துப் பொண்ணு ? -

வித்தி:- (சினந்து) நிறுத்தும் வார்த்தைகளை அளந்து பேசும், இனிச்சவாய்ப் புலவரே! காக்கையின் கூட்டிலே காக்கைக் குஞ்சும் இருக்கும்; குயில் குஞ்சும் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்!

பச்சை : ஒஃகோ! நீ காக்கா கூட்டிலே பொறந்த குயில் குஞ்சா? ஆமா.... ஆமா அதுவும் கருப்புதானே?

வித்தி :- கருப்பாக இருப்பதெல்லாம் காக்கை யென்று சொல்பவனுக்கு கண்மையும் காக்கை காரி ருளும் காக்கை ! தாசி வீட்டில் பிறந்தவளெல்லாம் வேசி தான் (மைத்திரேயனிடம்) ஐயா! நான் கன்னி கழிாயத காரிகை ! சந்திரவர்மர் என் காதலர் ! நான் மணந்து வாழ விரும்பும் மாத்தமிழ்க் கவிஞர் !

பச்சை :- அப்படீன்கு இதை அவரு ஏங்கிட்ட சொல்லலியே ஏங்கிட்ட சொல்லாம அவரு எப்படித் தான், யாரைத்தான் காதலிச்சிட முடியும்னேன் !

முல்லை : இந்தாய்யா! எங்க வித்தியாவதி, நத்தை வயித்திலே பொறந்த முத்து நாக்கை உள்ளே வச்சுப் பேசு ஆமா ! -

பச்சை :- அது சரி, எங்க சந்திரவர்மர்? முல்லை; வித்தியாவதி காதலுக்கு உகந்தவரு.

ஆன, இது வரைக்கும் பார் க் க ஷ மி ல் லே, பழகவுமில்லியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/28&oldid=671977" இலிருந்து மீள்விக்கப்பட்டது