காட்சி 5.
இடம் கைலாசநாதர் கோவில்.
காலம் : முற்பகல்,
(சக்திமுனையர், நிஷ்டையில் உட் காருமிடத்தில் உட்கார்ந்து கொண்டு பச்சை ஏட்டுச் சுவடியில் எழுத்தாணி யால் எழுதிக் கொண்டிருக்கிறார். எழுதிய பாட்டை தானகப் பாடிப் பார்க்கிறார்.)
காதலாடும் நெஞ்சிலே கற்பனைகள் பொங்குதே காசை எண்ணும் போதிலே அத்தனையும் மங்குதே!
பச்சை : (மகிழ்ந்து) சபாஷ் அற்புதமா அமைஞ் சிட்டுது பாட்டு என்னைக் கவிஞளுக்கிட முன் வந்த கருணைக் கடவுளே! கற்பனை வளம் கொடுத்த காபாலிக சிவமே 1 கோடி வணக்கம் !
முல்லை :- (வந்து கொண்டே) பச்சை! ஏது; ஏடும் எழுத்தாணியுமா கோயில்லே வந்து பாட்டு எழுத ஆரம்பிச்சுட்டே போலிருக்கே!
பச்சை :- பாட்டு எழுதமட்டுமா? (சிரித்து) பக வானுேட கிருபையாலே, அழகா பாடவும் ஆரம்பிச்சுட் டேனே! முல்லை! இதெல்லாம் எதுக்குத் தெரியுமோ? சந்திரவர்மனும், வித்தியாவதியும் போல இனிமே நீயும் நானும் சேர்ந்து வளர்க்க வேண்டியதுதான் !