பக்கம்:நந்திவர்மன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 6.

இடம்: காஞ்சியின் தெரு.

காலம் : பகல்.

{ப ச் ைச, ஒரு வாழைப்பழத்தை உரித்துத் தின்றவண்ணம் வருகிருன். எதிரே உச் சிக் குடு மி யைத் தட்டி முடிந்த வண்ணம் மைத்ரேயன் வரு கிருன்..! மைத் :- என்ன பச்சை வாழைப்பழம் தின்கிருயா? பச்சை :- பச்சை வாழப்பழமா? அரு மை யான தேன் கதலி சுவாமி ஒமக்கு வேனுமா? வாங்கிட்டு வர்றேன். பக்கத்துத் தெருக் கோயில்லேதான் பிரசாதப் பட்டுவாடா நடக்குது.

மைத் - (சிரீத்து) பச்சை வாழைப்பழம் ஒரு ஏழைப்பழமப்பா ! உனக்குச் சரிதான்; எனக்குப் பிடிக் காது.

பச்சை :- அப்படியானுல் நீங்க சாப்பிடறது ? மைத் : பலகாரம். பச்சை : பலகாரம் பழ ஆகாரம் பழ ஆகாரந் தான் நாளடைவிலே பலகாரம் என்பதாக மருவிற்று. ரெண்டும் ஒண்ணுதான் சுவாமி !

மைத் நீயும் கெட்டாய், உன் தமிழும் கெட்டது. போ ! ஏண்டா ஏழையும் பிரபுவும் ஒன்றாக முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/36&oldid=671986" இலிருந்து மீள்விக்கப்பட்டது