40
மைத் : அசந்தர்ப்பம் ஏதுமில்லையென்று நினைக் கிறேன். அப்படி இருந்தால்... மன்னிக்க வேண்டும்.
சந்தி:- (ஒவியத்தை வாங்கிப் பார்த்து) முடியாது. மன்னிக்கும்படியான காரியத்தையா நீர் செய்திருக்கிறீர்? வித்தியாவதி பாத்தாயா ஒவியத்தை?
வித்தி - (பார்த்து) அற்புதமான சித்திரம் பாடு கின்ற நீங்கள், அபிநயம் பிடித்து ஆடுகின்ற நான்! அடடா !
மைத் - ஆமாம், தேவலோகத்து சித்திரசேனனும் ஊர்வசியும் போல ! -
சக்தி : அன்பின் மிகுதியால் நம்மைச் சேர்த்து வைத்த மைத்ரேயர் : கலையின் திறத்தால் நம்மை அமரக் காதலராக்கி விட்டார் வித்தியாவதி எப்படி இவரை மன்னிப்பது? என் கையிலே ஆட்சி இருந்தால், பொற் காசுகளை வள்ளம் வள்ளமாக இ வ. ர து தலையிலே கொட்டி, குவியலிலே திணறடிப்பேன் இவரை !
மைத் :- அப்படியானுல், மன்னன் நந்திவர்மனின் பாராட்டினைப் பெறப்போவதில்லையா ஒவியம்?
சந்தி :- ஏன் பெருது ? செங்கரும்பை விரும்பாத யானையுண்டோ?
மைத் :- நாம் சந்திக்கும் நேரத்தில், யானைக்கு மதம் பிடித்தால்...?
சக்தி : நான் அடக்குகிறேன், ைமத்ரே யரே ! மன்னனின் பாராட்டைப் பெற வேண்டும் இந்த மகத் தான சித்திரம், அவ்வளவுதானே? அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.