உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

லோ :- (எழுந்து) மன்னர் பெரும1

கந்தி :- கலை வளர்த்தனர் எனது முன்னேர்கள் : காவியத் தமிழ் வளர்ப்பது எனது கடமை. தமிழ்த் தாயின் திருப்பணிக்காக புலவர் பெருந்தேவனுர்க்கு ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல்லும், இருபது கழஞ்சு பொன்னும் வழங்கப்பட வேண்டும், பட்டயம் செய்து தாரும்.

சீ லா :- கட்டளை !

பெருங் :- மன்னவ வளர்க நின் தமிழார்வம்! வளர்க நின் கொற்றம் ! என்றுமுள செந்தமிழ் போல் நின்று நிலவுக நினது புகழ் !

சந்தி : (எழுந்து) மன்னர் பெரும காவியப் புலவரை கெளரவித்தீர்கள், ஒவியப் புலவர் ஒருவர் தமது ஒவியத்தோடு வந்துள்ளார், நமது சபைக்கு.

கந்தி: கெளரவிப்போம் தம்பி! சக்தி : மைத்ரேயரே எடுத்துக்காட்டும் ஒவியத்தை. மைத் :- (எழுந்து) மகா பாக்யம் : மகா பாக்கியம் ! நாட்டியம், சிற்பம், சித்திரம் ஆகிய நற்கலைகளைப் பேணி வளர்க்கும் பெருந்தகையே! கலைஞர்களின் கற்பகத் தருவே! அடியேன் நமஸ்காரம். எனது ஒவியத்தைப் பார்த்து ரசிக்கப் படைக்கின்றேன், தங்கள் திருமுன்.

(ஒவியம் கொண்டு தர) ாந்தி:- (வாங்கிப் பார்த்து) பாட் டிசைக்கும் பாவாணன் நாட்டியமாடும் நங்கை மடவன்னம்! நன்று. இந்தப் பாடகனின் வடிவம் என் தம்பியை ஒத்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/45&oldid=671996" இலிருந்து மீள்விக்கப்பட்டது