உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

சந்தி :- இன்று, சிறுவன், நாளை? பக்தியைத் தாழ்வுபடுத்தும் இவனது மனப்பான்மை, பக்தியின் அடிப்படையிலே மகத்தான கலைகளை நிர்மாணித்த நமது பல்லவப் பரம்பரைக்கே இழுக்கு ! அண்ணு ! இவர்கள் எண்ணத்திலே நமது முன்னேர்கள் அறிவிலி கள் அந்தகர்கள், மூடர்கள் ! பேசுகிறார்கள், நீங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ! என்னுல் முடியாது.

சே! அவமானம் அவமானம்!

(வெடுக்கென்று திரும்பி வேகமாகப்

போகிருன்..}

கந்தி:- தம்பி சந்திரவர்மா !! தம்பி ! (வருந்தி) என்ன பொல்லாங்கு! போய்விட்டானே !

சங்கா : (அஞ்சி) நாதா மன்னிக்க வேண்டும். எதிர்பாராத சம்பவம். விவாதத்திலே......

கந்தி:- (சினந்து) கல்வியின் அகம்பாவம் அர சோச்சியது ! கருவத்தின் பரிகாசம் துள்ளவிட்டது. உங்கள் மமதையும் செருக்கும் என் மனதைக் குத்திக் குடைந்தன!

சங்கா : நான் தவருகப் பேசியிருந்தால்... நந்தி:- (குறுக்கிட்டு) சங்கா ! என் வேதனையை விரிவாக்க வேண்டாம். பேசாதே! போ!

(வெறுப்போடு மு க ம் திருப்பிக் கொள்கிருன் மன்னன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/56&oldid=672008" இலிருந்து மீள்விக்கப்பட்டது