இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 11.
இடம் : வித்யாவதி வீடு.
காலம் : முற்பகல்.
(மைத்ரேயனும், சேளுபதி விக்ரம
கேசரியும் இருக்கின்றனர்.)
மைத் :- சேனுபதியாரே சந்தேகமே வேண்டாம். எம்மோடு ஒத்துழைத்தால் எல்லா சுகபோகங்களையும் ஏற்றவகையில் பெறுவீர்.
விக்ர - பாலை வெறுக்கும் பூனையேது சுவாமி ? என்றாலும் மன்னருக்கு துரோகம் செய்வது ?
மைத் :- மனம்போல் வாழ்வு பெற்றிட சுருக்கமான வழி ! திட்டம் வென்றால் திகட்டாத பேரின்பம்! பட்டம் பதவிகள் பகட்டான யோகம் !
விக்ர :- தோற்றாலோ ?
மைத் :- தோஷம் வராது ! வெளிப்படையாகவா இருக்கும் நமது வேலைகள் ?
|ஆத்திரதோடு வருக்கிருன்
சந்திரவர்மன்;
சக்தி : மைத்ரேயரே ! மானம்! அரண்மனையில் என் மானமே போய்விட்டது! (சேணுபதியைப் பார்த்து) ஓ ! சேனுபதியாரே ? வாரும். வணக்கம்!
விக்ர: வணக்கம் !