உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 12.

இடம் கைலாசநாதர் கோயில்.

காலம் : முற்பகல்.

(காபாலிகர்-சக்திமுலையர், பிரகார ஒதுக்குப் புறத்தில் தியானத்தில் அமர்ந்திருக்கிறார். பச்சை, கணிகை முல்லையைத் துரத்த இருவரும் ஒடி வருகின்றனர்.) பச்சை :- (நின்று முல்லை ! முல்லை ! என்சொல் லைக் கேக்க மாட்டியா? கேக்க மாட்டியா?

முல்லை . முடியாது! என்னைத் தொட்டியா பல்லைத் தட்டிடுவேன். ஏய்யா! என்ன என்னுன்னு நெனச்சு திட்டே?

பச்சை :- கோயில் தாசீன்னுதான். முல்லை :- கோயிலுக்குத்தானே ? ஒனக்கில்லியே?

பச் : நான்தான் பணம் குடுக்கிறேன்னு சொன் னேனே. நம்பிக்கையில்லியா?

முல் :- நம்பிக்கையும் மொகரக்கட்டையும் ! இப் படிச் சொல்லி எத்தனைதடவைஎன்னை ஏமாத்தியிருக்கே?

பச் :- தோ பாரு முல்லை ! போனதெல்லாம் மறந் திடு, சுந்திரவர்மன் நாளைக்கு எனக்கு ரெண்டு பொன் தர்றதாகச் சொல்லியிருக்கார், வாங்கினதும் அப்படியே மொன முறியாமெ ஓங்கிட்டே குடுத்திடுறேன்! அப்புறம் நிரந்தமா நீ காதலி நான் காதலன் வித்தியாவதியும் சந்திரவர்மனும் போல, எப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/60&oldid=672013" இலிருந்து மீள்விக்கப்பட்டது