பக்கம்:நந்திவர்மன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 13.

இடம் : காஞ்சி அரண்மனை

காலம் : முற்பகல்.

(மன்னன் நந்திவர்மன் சிந்தனை யோடு உலாவ, சீலாதித்தரும் விக்ரம கேசரியும் நிற்கின்றனர்.)

15ந்தி : (நிதானமாக) கப்பம் செலுத்தவேண்டும். இல்லையேல் கடும் போர்க்குச் சித்தமாகவேண்டும் உம்! (உரக்க) எவ்வளவு மமதையிருக்க வேண்டும் மன்னன் பங்கையனுக்கு ? வரிப்புலியிடம் திறை கேட்டதாம் வால றுந்த நரி, சிரிக்காதா உலகம்? சீலாதித்தரே குறுக் கோட்டை மீது படையெடுத்துச் சென்று, சரிக்க வேண் டும் சாளுக்கியனின் ஆணவத்தை

சீலா :- ஒப்புகிறேன் மன்னவரே பல்லவப் பேர ரசைப் பகைத்தோன், அதன் பலனை உணர வேண்டும். சாளுக்கியனை வென்றடக்கி நாம் கப்பம் பெறவேண்டும். ஆஞ்)ல்.....

நந்தி : என்ன ஆணுல் ?

லோ :- அவன் நம்மீது ப ைட ெய டு க் கி ரு கு இல்லையா வென்பதை, சற்றுப் பொறுத்துப் பார்த்தா லென்ன ?

கங்தி :- சீலாதித்தரே! நம்மீது அவன் போர்

தொடுக்க நினைத்ததே பெருங்குற்றமாயிற்றே ! அதற் குத் தண்டனை நாம் அவன் மீது படையெடுப்பது தான்!

விக்ரம : எனது கருத்தும் இதுவேதான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/63&oldid=672016" இலிருந்து மீள்விக்கப்பட்டது