இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 14,
இடம் : அந்தப்புரம்
காலம் : பிற்பகல்
|மகாராணி சங்கா தேவி பாடிய வண்ணம், மகன் நிருபதுங்கனுக்கு வாட்போர் கற்பிக்கிருள் (மகாராணி யின் வாள் விழுகிறது)
கிருப :- (கரித்து) தோல்வி ! என்னிடம் தோற்று விட்டீர்களம்மா ; தோற்றுவிட்டீர்கள் !
சங் :- (வாளையெடுத்து) அவசரப்படாதே மகனே! அற்ப மகிழ்ச்சியில் அறிவை இழந்து விடாதே! வெற்றி யும் தோல்வியும் இடையிலல்ல, இறுதியிலே தெரிபவை ! விசு கத்தியை.
கிருப :- ஒ இன்னும் இருக்கிறதா? இதோ உங் களை வெல்லாமல் விடுவதில்லை. உம் ? (மீண்டும் வாட் போர். மன்னன் நந்திவருமன் வருகை)
கந்தி : (மகிழ்ந்து) நன்று ! நன்று பேச்சிலே காரமும், வீச்சிலே வீரமும் மின்னலோடுகின்றன. என் மகன் வீரன் ! மாவீரன் !
(பயிற்சி நிற்கின்றது)
நந்தி : சங்கா சகல கலாவல்லியே : புதல்வன் களப் போரில் வல்லவனுவான், இல்லை யில்லை, வல்ல வனுக்கிடுவாய் நீ!