காட்சி 1?
இடம் :- முல்லையின் வீடு
காலம் : மாலை
பச்சையும், அவளும் இருக்கின்
ளு றனர் ..]
முல்லை :- எங்கே ; நான் சொல்ற மாதிரி மட மடன்னு சொல்லு பார்க்கலாம் !
பச்சை :- முல்லை ! இதிலே நான் கெலிச்சேன் என்கையாலே நாலு அரை நீ வாங்கிக்கனும் !
முல்லை :- சரி. அடடா நரி கரடேறுதடா ஒன்பது நரியினில் ஒரு நரி சினை நரியடா சினை நரி முதுகினில் ஒரு பிடி நரை மயிரடா நரை மயிர் நுனியினில் புது மலர் மணமடா- புதுமலம் மணமதில் குமரியின் நினை
வடா !
பச்சை :- (நிதானமாக) அடடா, நரி கரடேறு தடா, ஒன்பது நரியினில் ஒரு நரி ..... சினை, நரியடா’ சினை நரி முதுகினிலே .. வந்து... வந்து...
முல்லை :- (வெடுப்பாக) பனங்காயி சே! சே! இப் படி ஆமை வேகத்திலே ஆருந்தான் சொல்வாங்க! நீ
என்ன !
பச்சை :- முல்லை வேகம் பெரிசா பாவ ம் பெரிசா : நான் புலவர் மகன். பாவத்தோட பக்குவமா, புரியராப்லதாஞ் சொல்வேன். அடடா, தடடா, தடா தடா வெல்லாம் ஒதவாது !