பக்கம்:நந்திவர்மன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 19

இடம் : காஞ்சி அரண்மனை

காலம் : மாலை

|ஆலோசனை மண்டபத்தில் ராணி சங்காதேவியும்-அமைச்சர் சீலாதித் தரும் இருக்கின்றனர்.)

சங்கா : மன்னரில்லாத வேளையிலே மாபெரும் தீங்கு அமைச்சரே ! பாண்டியன் சீவல்லபன் பல்லவ நாட்டின்மீது இப்போது போர் தொடுக்க வேண்டிய காரணம் ?

சீலா : எதுவும் கிடையாது தேவி! இது சந்திரவர்

மரின் சதித் திட்டம் !

சங்கா : ஆதாரம் என்ன ?

சீலா : இதோ, நமது ஒற்றர்கள் பாண்டிய வீரனி டமிருந்து கைப்பற்றிய முடங்கல்! (கொடுக்கிருன்)

சங்கா : (வாங்கிப்படித்தல்)

காஞ்சி இளவல் சந்திரவர்ம பல்ல வர்க்கு, வணக்கம். யாவுமறிந்தோம். உமது சகோதரன் நந்தி வர்மனை வீழ்த்தவும், உம்மை அரியாசனத்து ஏற்றவும் நமது படைபுறப்பட்டு விட் டது. வரும் மதியத்தன்று பெண்ணை யாற்றங்கரையிலே தங்கும். மற்ற காரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/84&oldid=672039" இலிருந்து மீள்விக்கப்பட்டது