உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

லோ: எலியைக் கொல்வதற்குப் புலி தேவை யில்லை ! மன்னவர் களம் புகுமுன்பே பகைவரின் பலம் சரிந்து விட்டதே ! -

சங்கா : என்றாலும், அவர் உடனே அறிய வேண் டும், இந்த அநியாய சதித் திட்டத்தை!

சீலா : பாண்டியன் குறுக்குவழிச் செய்தியோடு,

இதனையும் சேர்த்து இப்பொழுதே அனுப்புகிறேன், மகாராணி !’ . o

சந்தி:- (வியத்து) பாண்டியன் குறுக்கு வழிப் படையெடுப்பா? எ ப் போ து? ஏன்? எவ்வாறு

தெரிந்தது?

சங்கா : மன்னவரை வீழ்த்தி, சின்னவரைச் சிங்கா தனத்தில் ஏற்ற, திட்டப்படி புறப்பட்டுவிட்டது சீவல்ல பன் படை. பாண்டியப்படை வென்றால் நீர்தான் பல்லவ சக்கரவர்த்தி ! ஏன்? அப்படித்தானே?

சக்தி : (அஞ்சி) ஆங் ... அபாண்டம் எனக்கும் அந்தப் படையெடுப்புக்கும் சம்மந்தமே கிடையாது !

சங்கா : உமக்காகவே படையெடுப்பு ! சக்தி : ஆதாரமில்லாத குற்றச்சாட்டு!

சங்கா : பாவம் ! உமக்கு வந்த ஒலை உம் கையி லேயே கிடைத்திருந்தால், இங்கு வந்தே இருக்க மாட் டீர் மதிவளம் மிக்க மைத்துனரே ! ஒவியன் மைத்ரே. யன் சதிக்கு ஆதாரம், சாளுக்கிய மன்னனின் முடங்கல்! உமது சதிக்கு ஆதாரம், இதோ பாண்டிய வேந்தனின்

பட்டோலை !

{காட்டுகிருள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/87&oldid=672042" இலிருந்து மீள்விக்கப்பட்டது