பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


செய்வீர்கள் என்று கேட்டனர். அதற்கு இவர்கள், யார் யார் என்னென்ன உதவி செய்கிறார்களோ-செய்யட்டும் யாரும் செய்யாமல் மீதியாய் விடப்பட்டவற்றையெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி வேண்டியன செய்தார்கள். திருப்பாதிரிப் புலியூரில் 1973ஆம் ஆண்டு மறைத்திரு ஞானியார் அடிகளார் பெயரால் ஒரு கல்லூரி தொடங்கு வதற்காகக் கல்லூரிக் குழுவினர் இவர்களிடம் வந்து உதவி வேண்டினர். ஓரளவு பொருள் தந்து ஒரு பகுதிக் கட்டிடம் கட்டித் தருவதாகவும் இவர்கள் ஒத்துக் கொண்டார்கள் தொழில் முதல்வர்: பெரிய வள்ளலாகத் திகழ்ந்த இவர்கள் பெரிய தொழில் முதல்வராகவும் விளங்கினார்கள்; வேளாண் மைக்கு வேண்டிய கருவிகளை விற்பதன் வாயிலாகவும், அவற்றை இயக்கும் வழிமுறைகளை அறிவிப்பதன் வாயி லாகவும் வேளாண்மை வளர்ச்சிக்கு மிகவும் துணை புரிந்து வந்தார்கள். பொறிகளைப் பழுது பார்ப்பதிலும் இயக்குவதிலும் இவர்கள் வல்லவர்கள். கடவுள் பற்று; முதலியார் அவர்கள் கடவுள் பற்று (பக்தி)உடையவ ராகவும் விளங்கினார்கள். இந்தியாவில் உள்ள பல்வேறு தெய்வத் திருப்பதிகட்கும் பயணம் செய்து வழிபட்டு வந் துள்ளார்கள். பல கோயில்கள் கட்டுவதற்கும் பலகோயில் களில் திருப்பணி செய்வதற்கும் இவர்கள் பொருள் உதவி புரிந்துள்ளார்கள்; பலகோயில்களின் அறங்காவலராகவும் அறங்காவல் குழுத் தலைவராகவும் நற்பணியாற்றியுள் ளார்கள். பலராலும் விரும்பப்பட்டு வந்த இவர்கள், தம்மை நாடிவந்த அனைவருக்கும் பெரும்பேருதவி புரிந்