உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

துள்ளார்கள்; மருத்துவமனை போன்ற சில நிறுவனங்கட்கு ஒவ்வொரு பகுதிக் கட்டிடம் கட்டித் தந்துள்ளார்கள்.

விடுதலை வீரர்

புதுவை அரசு, இவர்கட்கு விடுதலை வீரர் என்ற சிறப்பளித்து 24-2-1989 ஆம் நாள் தொட்டு ஓய்வூதியம் கொடுத்துச் சிறப்பு பெற்றது. 19-4-1989ஆம் நாள் காலமான இவர்கட்கு உரிய ஒய்வூதியம் 55 நாட்களுக்கேயாம். பலர்க்கு வாரி வாரி வழங்கிய கையால் வேறோரிடத்திலிருந்து ஒன்றும் பெறக் கூடாது என்பதற்காக இவர்கள் விரைவில் இறைவனடி சேர்ந்தார்கள் போலும்! இந்த ஒய்வூதியத்தைப் பள்ளிக்குத் திருப்பிவிடவே இருந்தார்கள்; அதற்குள் இறுதி எய்தி விட்டார்கள்.

ன்னலக்காரர்:

முதலியார் அவர்கள் பெரிய தன்னலக்காரராகச் செயல்பட்டுள்ளார்கள். அதாவது, பிறருக்கு உதவிகள் புரிந்துள்ளதின் மூலம் தமக்கு உதவி புரிந்து கொண்டுள்ளார்கள். அதாவது, தம்முடைய பேரும் புகழும் உலகம் உள்ளளவும் நின்று நிலைக்கச் செய்துகொண்டுள்ளார்கள். நாட்டிற்கு-உலகிற்கு இத்தகைய தன்னலக்காரர்கள் மிகவும் தேவையல்லவா?