பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


நூல என்றும் முகமன் இயம்பா தவர் கண்ணும் சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்.துன்றுசுவை பூவிற் பொலி குழலாய் பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து. மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர் பேசுற்ற இன்சொல் பிறிதென்க-ஈசற்கு நல்லோன் எரிசிலையோ நன்னுதலாய் ஒண்கரும்பு வில்லோன் மலரோ விருப்பு. தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர் தங்கட் குரியவரால் தாங்கொள்க-தங்கநெடுங் குன்றினாற் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால் கன்றினால் கொள்ப சுறந்து. பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம்-பிறர்க்குதவி செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர் பெருமை நொய்தாகும்-பூக்குழலாய் நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மைநிலை போம்.