பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


சொல்லப்படும் பதினாறு கலைகளும் பொருந்திய முழு நிலவு போன்றது என்று கூறக்கூடிய முகத்தாளே! பார்க் கும்போது இரண்டு கண்களும் ஒரு பொருளை மட்டுமே பார்க்கமுடிவது போல்,உண்மைக் காதல் உடைய மனைவி யும் கணவனும் மாறுபாடு இல்லாமல், தீதற்ற நல்லதொரு செயலை ஒருமித்துச் செய்வர். : 6 பேரொலி செய்யும் குளிர்ந்த பெரிய கடலும். முனி வர்க்கு அரசாகிய அகத்தியன் கையால் வாரிஎடுத்து உண் ணப்பட்டு விட்டது. எனவே, யாம் செல்வத்தில் கடல் போன்றோம்; வலிமையில் சீயம் (சிங்கம்) போன்றோம் எனச் செருக்கு கொள்ளின் அமிழ்ந்து விடுவர். 7 வெள்ளத்தைத் தடுப்பது அருஞ் செயலா? பெரிய கரையை உடைத்து விடுதல் அருஞ் செயலா? சொல்க. தடுத்தல் போல், மனத்தை ஈர்த்து ஓங்கி எழுகின்ற சினத்தை அடக்கிக் காக்கும் பண்பேசிறந்த பண்பு என்று கொள்க. 8 (தாருகாவனத்தில்)பிச்சை ஏற்ற சிவனது விளங்குகிற சடைமேல் உள்ள பாம்பு, (திருமால் ஏறிவரும்) படர்ந்த இறக்கைகளை புடைய பறவை யரசனாகிய கருடனைக் கண்டு அஞ்சாதது போல், மெலிந்தவர் வலியவரைத் துணையாகக் கொள்ளின் வலிமையுடைய பகைவர்க்கு அஞ்சார். 9 நிலா தன் கறுப்புக் கறையை நீக்கக் கருதா விடினும், விண்ணின்மேல் இருந்து, உலகில் நிறைந்துள்ள இருளைப் போக்குதல் போல், சான்றோர் தமது தேவைக் குறை வைத் தீர்க்கக் கருதாமல்,பிறர்க்காகத் தளர்ந்து அவர்க்கு உற்றுள்ள கொடிய குறை பாட்டைத் தீர்ப்பர். } ()