பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


சூறாவளிக் காற்று தன் வலிமையால் கல் துாணைச் சுழலச் செய்யாது; சிறிய அற்பத் துரும்பையே சுழலச் செய்யும். அதுபோல, நிலையற்ற ஐம்புலன்கள், அற்பர்கட் கன்றி, உண்மை யறிஞர்க்குத் துன்பம் தரா. 11 திருந்திய அணிகலன் அணிந்தவளே!குளிர்ந்த நீர் பொத் த ல் குடத்தில் நிற்காதது வியப்பன்று-நின்றாலே வியப்பு அதுபோல, வருந்துகிற உயிர், ஒன்பது பொத்தல்களை யுடைய உடம்பிலிருந்து ஒடிவிடாமல் உள்ளே பொருந்தி யிருப்பதுதான் வியப்பு. 12 பால் சுரக்கின்ற-மலையளவு அமைந்த மார்பகத்தை யுடைய பெண்ணே!பதினாறுகலையுடை நிலவுக்கு அன்றன் றைக்கு எத்தனை கலை உண்டோ அதற்கேற்ப ஒளி யின் அளவும் இருப்பது போல, உயர்ந்தவர், பொருள், மிகுதியாகவோ குறைவாகவோ இருக்கும் அளவிற்கு ஏற்பப் பிறர்க்கு விருப்பத்துடன் அளிப்பர். 13 மணக்கின்ற- வண்டு கோதுகின்ற குளிர்ந்த மலர் அணிந்த கூந்தலாளே! பெரிய மேரு மலைக்கும் (சிவனால் வில்லாக) வளைக்கப்படும் நிலை நேர்ந்தது. ஆதலால் உயர்ந்தவர், அழியாத பெரிய செல்வநிலை உடையோம், என்று தருக்கு கொள்ளுதல் இல்லை. 14 நல்ல பெண்ணே! மொழி அறியாதார்க்குப் பழம் பெரும் நூல்களால் ஏது பயன்? பார்க்கும் கண் இல்லா தார்க்கு விளக்கால் ஏது பயன்? இல்லாதது போல், அன்பு இல்லாதவனுக்கு,இவ்வுலகில்இடம்-பொருள்-ஏவல்-மற்றும் எல்லாம் இருந்தும்,அவை அவனுக்கு என்னபயன் தரும்? 15