பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


பெரிய கடல் நீர் சுருங்கிய உப்பங்கழியிலும் எதிரே றிச் செல்லுதல் போல, உயர்ந்தவர், தம் பெருமையையும் தலைமை நிலைமையையும் பொருட்படுத்தாமல், தம்மை அடைந்தவர் தம்மினும் இழிந்தவ ராயினும் அவர்பால் சென்று அவரது துயர் துடைப்பர். 16 அழகிய வளையல் அணிந்தவளே! நிலை நின்று கனி தந்து பின் அழிந்து விட்ட வாழை மரத்தின் கீழ்க்கன்றும் அவ்வாறே கனி தருவது போல், இரப்பவர்க்குக் கொடுத் துக் கொடுத்து என் தந்தை ஏழையானான் என்று காரணம் கூறி அன்னாரின் பிள்ளைகள் கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள் (நிறுத்தக்கூடாது). 17 பொன்னால் செய்த ஒலிக்கின்ற வளையல் அணிந்த வளே! கடல், வெப்பக்கதிராகிய ஞாயிறால் பொங்காது, குளிர்ந்த கதிராகிய திங்களாலேயே பொங்குவது போல், இப் பெரிய உலகினர், இன்சொல்லால் அல்லாமல், வன் சொல்லால் என்றும் மகிழார். 18 இனிய மாமரம், தென்றல் காற்று வீசின் தளிர் துளிர்த்து வளரும்; சுழல் காற்று வீசின் சிதையும்; இது போல், செயல் வல்லவர், நல்லோர் வரின் சிரித்த முகத் துடன் இன்புறுவர்; தீயவர் வரின் வருந்துவர். 19 தேர்ந்த அணிகலம் உடையவளே! கண்ணானது மிகுந்த நோயால் வருந்துகிற மற்ற உறுப்புகளைக் (அங் கங்களைக்) கண்டு அழும். இதுபோல், பெரியோர், பிறரது பிணியைக் கண்டு, தமக்கு வந்த பிணிபோல் எண்ணி, நெருப்பில் கொட்டிய நெய்போல் உள்ளம் உருகி வருந்து வர் என்று அறிக. 20