பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


இளம் பெண்ணே! ஞாயிற்றின் ஒளி, நம் கண்பார்வை செல்லும் தொலைவு மட்டுக்குமா உள்ளது? அது விண் வெளி முழுதும்இருக்கிறதல்லவா?சொல்லுக. இது போல, நல்லறிஞர், ஒருவரின் சிறிய உருவத் தோற்றத்தைக் கண்டுவிட்டு, அவரது கடலனைய கல்விப் பெருமையைப் புறக்கணிக்க மாட்டார்கள். - 26 அம்மா! முளைத்துக் கொண்டிருக்கும் பற்கள் கடின மான உணவுப் பொருள்களையும் கடித்து மென்று நாக் கிற்கு மிகுந்த சுவையைக் கொடுப்பது போல, கற்றறிந் தோர், பதிலுதவி எதிர்பார்க்காமல், தம் உடல் வருந்தி யாவது தம்மால் இயன்ற உதவியைப் பிறர்க்குச் செய்வர் - 27 வாழை மரம், நன்கு முற்றுதல் இல்லாத காய் நிலையிலும் கறிக்கு உதவும். எட்டி மரம் பழுத்தாலும் உதவுமோ? சொல்! இதுபோல, பேரறிஞர் சினங்கொண் டிருக்கும்போதும் வந்தவர்க்கு உதவி செய்வர்; கீழோர் மனம் கனிந்து மகிழ்ச்சியா யிருக்கும் போதும் பிறர்க்கு உதவார். 28 பண்ணென இனிக்கும் குளிர்ந்த மொழியாளே! மண் ணுலகில் உள்ள புலியைக் கண்டு விண்ணில் நிலாவில் உள்ள (களங்கமாகிய) மான் அஞ்சாதது போல், மனத்தை உயர்ந்த பரம்பொருளாகிய கடவுளிடம்செலுத்தியவர்கள், கோடி கோடியாக உடம்புக்கு அடுக்கி வரும் துன்பங்கட்கு அஞ்சமாட்டார்கள். 29 வெள்ளம் வருவதற்கு முன்பே அணைக்கரை கட்டி வைக்காதவர்கள், வெள்ளம் பெருகிவரும் போது என்ன செய்ய முடியும்? சொல்லுக. இவ்வாறே, உயிரை வாங்கும் கொடிய எமன் கொல்வதற்கு வரு முன்பே, மன நெகிழ் வுடன் அறச் செயல்கள் புரிந்து உய்ய வேண்டும். 30