பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார்-நேரிழாய் மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல் கைசென்று தாக்கும் கடிது. பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார் மன்னும் அறங்கள் வலியிலவே-நன்னுதால் காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ தாழ்ஒன் றிலதாயின் தான். எள்ளா திருப்ப இழிஞர்போற் றற்குரியர் விள்ளா அறிஞரது வேண்டாரே-தள்ளாக் கரைகாப் புளதுநீர் கட்டுகுளம் அன்றிக் கரைகாப் புளதோ கடல் அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால் செறிபழியை அஞ்சார் சிறிதும்-பிறைநுதால் வண்ணஞ்செய் வாள்விழியே யன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோ இருளைக் கண்டு கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் மற்றையர்தாம் என்றும் மதியாரே-வெற்றிநெடு வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம் 31 32 33 34 35