பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


அழகிய அணிகலன் அணிந்தவளே! உடம்பின் மேல் போய்த் தாக்குகின்ற பெரிய தடி அடியை, கையானது விரைந்து சென்று தன்மேல் தாக்கத் தடுப்பது போல, பேரறிஞர்கள், பிறரைத் தாக்கும் துன்பத்தை வீரமொடு விரைந்து சென்று தாம் தாங்கி அவர்களைக் காப்பர். 31 நல்ல நெற்றியாளே! வயிரம் பொருந்திய உயர்ந்த வன்மையான கதவு, ஒரு தாழ்ப்பாள் இல்லையெனில் காக்கும் வலிமை இல்லாதது போல், அறநூல்கள் எடுத் துச் சொல்லும் பயனுள்ள அறங்களை ஆராயும் அறிவு இல்லாதவர்கள், ஒப்புக்காகச் செய்யும் அறச்செயல்கள் நீடிக்கும் வலிமை இல்லாதனவாகும். 32 நீர் நிறைந்த குளத்திற்குத் தள்ள முடியாத கரையின் காவல் வேண்டியுள்ளது. மற்று, பெரிய கடலுக்குக் கரை காப்பு தேவையில்லை. அது போல, இழிசெயலுடையவர் கள், தம்மை யாரும் இகழாதபடி தற்காப்புக்காக என் னென்னவோ செய்வர் ; நீங்காத நல்லறிவினர்க்கு அத் தகைய நிலை தேவையில்லை. 33 பிறை நிலாவைப் போன்ற நெற்றியாளே! அழகு தரும் ஒளியுள்ள கண்ணே இருட்டைக் கண்டு அஞ்சுமே தவிர, பார்வை மறைந்த குருட்டுக் கண் அஞ்சாது. அது போல், அறிவுடையவர் பழிக்கு அஞ்சுவாரேயன்றி, அவ் வறிவு பெறாதவர் தம்மிடம் உள்ள பெரும் பழிக்குச் சிறி தும் அஞ்சார். 34 நீண்ட வெற்றிவேல், வடிவமைப்பு அழகை விரும்பு கிற ஒளியுடைய கண்களை உடையவளே! வாழைப் பழம் பாலோடு சேர வேண்டுமே தவிரப் புளித்த காடி நீரோடு சேர வேண்டுதல் இல்லை. அது போல, மேலோர், கற்ற றிந்தவர்களை விரும்புவரே யன்றி மற்றவர்களை என்றும் மதிக்கார். * 35