பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


எப்போதும் நெல்லுக்கு நீர் இறைப்பரே தவிர உலர்ந்து போன காட்டுப் புல்லுக்கு யாரும் நீர் இறைக் கார். அதுபோல, உயர்ந்தோர், யாரும் தக்கார்க்கே உதவுவர்-தகாதவர்க்கு உதவுபவர் இல்லை-என்னும் நியதி யால் ஒழுங்கு மீறிப் போனவர்க்கு உதவ மாட்டார்கள். பொன்னின் உயர்வைப் போக்கிய அழகிய இரண்டு மார்பகங்களை உடையவளே! அகத்தியரை விஞ்சிய விந்த மலை பின் அவரால் தாழ்த்தி அமுக்கப்பட்டுத் தன் உயர மும் உயர்வும் நீங்கியதை நீ அறியாய் போலும்! அது போலவே, பெரியோர்களின் முன் தன்னை உயர்வாகக் கற்பனை செய்து புகழ்ந்து கொள்ளும் அறிவிலி, பின், நிலை பெறாமல் உயர்வு நீங்கத் தாழ்ந்து போவான் 37 நல்லவளே, கேள்! காய் முதிர்ந்தால் தின்னக் கூடிய இனிய பழமாகும். இளந்தளிர்கள் முதிர்ந்தால் என்ன ஆகும்? சருகாய் உதிர்ந்து போகும். அவ்வாறே, நல்லவ ரோடு கொள்ளும் நட்பு நாளும் வளர்ந்து நன்மை பயக் கும்; தீயவருடன் கொள்ளும் தொடர்போ நாளுக்குநாள் குறைந்து தீமை செய்யும். 38 பொன் வளையல் அணிந்தவளே! படர்ந்து செல்லும் செழுமையான கொடியில் மெல்லிய பூக்கள் மலர்ந்த அப் பொழுதே மணம் வீசும். அது போல், கல்வியறிவற்றவ ரோடு கொண்ட அழுத்தமான நட்பும், அவரோடு கூடிய அந்த நேரத்திலேயே (முதல் சூழ்நிலையிலேயே) தீமை தருவதாக இருக்கும். 39 பொன் போன்றவளே! மின்னுகின்ற அணிகலன் அணிந்த மற்ற உறுப்புகள், அந்த அணி பூணாத-பொருள் களைப் பார்க்கக் கூடிய கண்ணுக்கு நிகர் ஆகுமோ? ஆகா-அறிவாயாக! அது போல், பொன் அணிகள் பூண்ட மன்னர்கள், அவை அணியாத-பெரிய கல்வி பெற்ற அறி ஞர்கட்கு ஒப்பாக மாட்டார்கள். 40 நன்னெறி நயவுரை கிறைவு