உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

ஆங்கிலத்தில் இலக்கியச் சுவை பெறவேண்டுமெனில், ஷேக்சுபியர், ஷெல்லி, மில்டன் முதலியோரிடம் செல்ல வேண்டும். தமிழிலோ, இந்த நன்னெறி நூலிலேயே போதுமான இலக்கியச் சுவையைப் பெறமுடியும்.


இந்த - உரைநூலை எழுதச் செய்தவர் முத்தியால் பேட்டை உயர்திரு வே.ச. பழநிசாமியவர்கள். வெளியிடுபவர்கள் அவர் குமாரர்கள். இவர்கட்கெல்லாம் நன்றி உரியது.

இந்நூலின் பெரும்பாலான பாடல்கள் பிறர்க்கு உதவி செய்வதைப் பற்றியே கூறுகின்றன. எனவே, பிறர்க்கு உதவி செய்தலையே பெருநோக்காகக் கொண்டிருந்து தெய்வமாகி விட்ட வள்ளல் மு. சின்னாத்தா முதலியாரின் நினைவு வெளியீடாக இது வருவது மிகவும் பொருத்தமாகும். சிறார் முதல் முதியோர் வரை அனை வருக்கும் இந்த வெளியீடு பயன் அளிக்கும்.

புதுச்சேரி-11.

சுந்தர சண்முகன்

26–4—1989

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நன்னெறி_நயவுரை.pdf/9&oldid=1700399" இலிருந்து மீள்விக்கப்பட்டது