பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

25

இஸ்லாத்திலே சமத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லாமல், இஸ்லாத்தில் சமத்துவம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லவேண்டும்" என்றேன் [கை தட்டல்]. ஒத்துக்கொண்டார்கள். உண்மையும் அதுதான்.


4. சகோதரத்துவம்

சகோதரத்துவம்: அது மக்கள் அனைவரும் உடன் பிறந்தோர் என்பது. கறுப்பு அடிமை பிலால், வீரத் தலைவர் சையது, பணக்கார அபுபக்கர், பலசாலி உமர், வாலிப வீரர் அலி, ஆகிய இவ் ஐவரின் வரலாறு எல்லாம் உங்களுக்கு நன்கு தெரியும், படித்து இருப்பீர்கள். ஒன்றுக்கொன்று மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேற்றுமை. இவர்கள் அத்தனை பேரையும் ஒரு மேடையில், ஒரு வரிசையில் நிறுத்தித் தோளோடு தோள் சேர்த்துச் சகோதரனாக்கி வைத்தது இஸ்லாம். இது நாயகம் அவர்களுடைய போதனை. இதை அவர்களைத்தவிர வேறு எவராலும் செய்ய முடியாது. வேறு எச்சமயத்திலும் காண முடியாது. இது ஒன்று போதும் சகோதரத்துவத்தைப் பற்றிக் கூறுவதற்கு.


5. தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி என்றால், பின்னால் வருவதை முன்னால் அறிபவர் என்றாகும். நபி என்றால், இறைவனுடைய திருத்தூதர் என்றாகும். எத்தனையோ தீர்க்கதரிசிகள், நபிமார்கள் உலகத்தில் தோன்றினார்கள் என்று எல்லாச் சமயத்தினரும் கூறுகிறார்கள். ஆனால் தீர்க்கதரிசி என்ற சொல்லுக்கு உரியவர்கள் நம்முடைய நபிகள்