பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

நபிகள் நாயகம்

களை விடுதலை செய்தனர். இச் செய்தியைச் சிறைக் கைதிகள் அனைவரும் கேட்டு, மகிழ்ந்து வெளியில் ஓடினர். 'ஹிந்தா' என்ற அந்தப் பெண் மட்டும் தனக்கு விடுதலை கிடைக்காது என்று நம்பி. அங்கேயே இருந்தாள். சிறைக் காவலாளிகள் அவளுக்கும் விடுதலை கிடைத்திருப்பதாகச் சொல்லி வெளியே போக வற்புறுத்திய பொழுது, 'எனக்கும் விடுதலையா! எனக்கும் விடுதலையா!' என அவள் மனம் உருகி, உருகி அழுது, அழுது அரற்றிய சொற்கள் நம் உள்ளத்தை எல்லாம் உருக்குகின்றன. என்னே நாயகம் அவர்களின் பெருந்தன்மை!


10. தெய்வ பக்தி

அவருடைய தெய்வ பக்திக்கு ஒன்றென்ன, இரண்டு சான்றுகள். ஒரு தரம், அவருடைய பகைவர்கள் அவரை நெருங்கி விட்டார்கள். ஹஜ்ரத் அபூபக்கர் உடன் இருந்தார்கள். பகைவர்கள் அவர்களைத் தேடி அழிக்க 70 பேர் வந்தார்கள். 'ஏதோ இன்று நடக்கும்' என்று நாயகம் அவர்களும், அபூபக்கரும ஒரு குகைக்குள் இருந்தார்கள். பவருடைய காலடிச் சத்தம் மிக நெருக்கமாகக் கேட்கிறது. அப்பொழுது ஹஜ்ரத் அபூபக்கர், நாயகம் அவர்களை நோக்கி. "ஹஜ்ரத், 70 பேர் வருகிறார்களே! நாம் இரண்டு பேர்தானே இருக்கிறோம்?" என்றார். நீங்களானால் என்ன சொல்வீர்கள்? இரண்டு பேர் என்றுதானே? நாம்தான் என்ன சொல்லுவோம்? நாம் சொல்லாததை அவர்கள் சொன்னார்கள். உடனே அவர்கள் "நாம் இருவர் அல்லர், மூவர்" என்றார்கள். ஹஜ்ரத் அபூபக்கர் யாரோ கூட இருக்கிறார்கள் என்று குகையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அதைக் கண்டு நாயகம் அவர்-